திருநீறு எந்த விரல்களால் அணிந்துகொள்ள கூடாது...?

இறைவனை வழிபட்டவுடன் நாம் திருநீறு அணிவது வழக்கம். நாம் திருநீறு அணிய பயன்படுத்தும் விரல்களை பொருத்து அதன் பலனானது  அமையும்.
சில விரல்களால் திருநீறினை அணியும் போது நன்மையும், சில விரல்களால் அணியும் போது தீமையும் ஏற்படுகிறது. அர்ச்சகர் நமக்கு திருநீறினை அளிக்கும் போது எந்த விரல்களால் எடுத்து இடவேண்டும் பெரும்பாலானோர்க்கு தெரிவது இல்லை.
 
* கட்டை விரலினால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதிகள் ஏற்படும்.
 
* ஆள்காட்டி விரலினால் அணிந்தால் பொருள் நாசம் ஏற்படும்.
* நடுவிரலினால் திருநீறு அணிந்தால் நிம்மதியின்மை ஏற்படும்.
 
* மோதிரவிரலால் திருநீறு தொட்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
 
* சுண்டு விரலால் திருநீறு அணிந்தால் கிரகதோஷம் உண்டாகும்.
 
* மோதிரவிரம், கட்டை விரலால் திருநீறு எடுத்து அணிந்தால் உலகமே வசப்படும், எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.


இதில் மேலும் படிக்கவும் :