ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (16:28 IST)

கரூர்: மாரியம்மன் கோவில் 54-ஆம் ஆண்டு பால்குட விழா

கரூர் அருகே மேட்டுமருதூர் மாரியம்மன் கோவில் 54-ஆம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூரில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம், தீர்த்தக்குடம் விழா காவிரி ஆற்றில் நீராடி பக்தர்கள் அங்கிருந்து தங்களது பால்குடம் தீர்த்தக்குடங்களுக்கு தீபாராதனை செய்தனர்.
 
மேலும் கரும்பு தொட்டில் கட்டி சுமந்து வருதல் என தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தும் விதமாக மருதூர் காவிரி ஆற்றிலிருந்து 3  கிலோமீட்டர் வரை நடந்து வந்து மேட்டுமருதூரில் உள்ள மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பிள்ளையார் கோவில், ஒல்லிவிட்டான் கோவில் என பக்தர்கள் நேர்த்திகடன்களை அந்தந்த தெய்வங்களுக்கு சென்று  தீர்தங்களை ஊற்றி வழிபடுவர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சாமி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.