திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்கதாகவும், அறம் நிறைந்ததாகவும் உள்ளது ராமாவதாரம். மனிதன் நீதிமுறைகள், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதற்காக மண்ணில் அவதரித்தார் ஸ்ரீராமர். அவர் அவதரித்த நாள் ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. ராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை வழங்கக்கூடியது. `ரா என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கெல்லாம் வெளியேறி விடுகின்றன...