வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கஷ்டங்கள் ஏற்படாமல் இருக்க செய்யவேண்டிய பரிகாரங்கள்...!!

நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி வருபவர்களுக்கு தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம்  கட்டுப்படும்.

காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுதுக்கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்.
 
சமையலறையும், படுக்கையறையும் பக்கத்தில் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
 
துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விடவேண்டும்.
 
நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை வாசலில் கட்டி, கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.
 
வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகிதப்பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது.
 
காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.
 
இடது கை கீழே இருக்கும் படி படுத்து உறங்க ஆயுள் விருத்தியாகும்.
 
வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ அல்லது செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.