1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 23 ஏப்ரல் 2022 (13:01 IST)

திருப்பங்களை நல்கும் திருவோண விரதம் !!

Thiruvonam fasting
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை தரிசித்து வணங்குவது சிறப்பாகும்.


இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருவோண நட்சத்திரத்தன்று சுண்டலை பிரசாதமாக பெருமாளுக்கு படைத்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.

காலையில் வழிபாடு செய்தால் நோய்கள் குணமாகும்.  நண்பகல் வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்.  மாலை வழிபாடு செய்தால் பாவம் நீங்கும்.

திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பில்லா பேறுடன் வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று விஷ்ணு புராணம் மற்றும் சிவ புராணம் ப்ரம்ஹ வைவர்த்த புராணம் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள்.

ஒருமுறை திருவோண விரதம் இருந்தால்கூட போதும், சந்திரனின் அருள்பெற்று அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி, இனிமையான வாழ்வு கிட்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

திருப்பங்களை நல்கும் திருவோண விரதத்தை மேற்கொண்டால் நிச்சயம் உங்கள் வீட்டில் மஹாலக்ஷ்மி கடாக்ஷம் மற்றும் சுபிக்ஷம் மற்றும் அளவில்லாத செல்வம் குடிகொள்ளும்.