ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கோயிலின் கருவறை இருட்டாக இருப்பதற்கான காரணம் என்ன...?

கோயிலின் கருவறை ஒலி அலைகளின் அதாவது இறை ஆற்றலை கடத்தும் கலமாகும். விமானக் கலசம் மூலவரின் திருவுருவச் சிலைக்குச் சூரிய கதிர்களின் மூலமாகக் கிடைக்கப் பெறும் ஒலி அலைகளைக் கடத்துகிறது.
மூலவரின் சிலைக்கு அடியிலுள்ள நவரத்தினக் கற்களும் யந்திரத் தகடும் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கப்பெறும் ஆற்றலை மூலவரின் திருவுருவச்  சிலைக்குக் கடத்துகின்றன. எல்லா ஆற்றல்களையும் ஒருங்கே பெற்றுக்கொண்ட மூலவரின் திருவுருவச் சிலை, அதனை இறை ஆற்றலாக மாற்றி இறைவன்  திருமுன்பு இருக்கும் வாகனம், பலி பீடம் மற்றும் உற்சவ மூர்த்தங்கள் மீது அவ்வாற்றலைக் கடத்துகிறது.
 
பிறகு கோயில் முழுவதும் அவ்விறையாற்றல் பரவுகிறது. அங்கே வழிபட வருகின்ற அடியவர்கள் மீதும் அவ்விறையாற்றல் பதிகின்றது. கருவறையில் இருந்து வரும் அருள் ஒலி அலை எப்பொழுதும் கிடைக்க கருவறை இருட்டாக இருத்தல் அவசியம். அதோடு பெருமானுக்கு முறையான பூசைகளும், நிறைவான திருநீராட்டுதலும், அவசியம் நடைபெற வேண்டும்.