ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (12:13 IST)

பஞ்சமி திதியில் வாராஹியை வழிபட உகந்த மந்திரம் !!

அம்பிகையிடம் இருந்து தோன்றிய பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகியோரே சப்த கன்னியர் என்கிறது புராணம். இவர்களில் வராஹியம்மன் மகாசக்தி வாய்ந்தவளாக திகழ்கிறாள்.


வராஹம் என்றால் பன்றி. மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சக்கட்டமாக இருக்கின்ற இவள், தன்னை நாடி வந்தவர்களுக்கு அன்பினாலும், கருணையினாலும், ஆதரித்து அருள் புரிவதில் மழைக்கு நிகரானவளாக கருதப்படுகிறாள்.

வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என இரண்டு முறை வரும் பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை படைப்பது மிக விசேஷம்.

நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து மகிழ்ந்து அருள் தருவாள். மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு.

சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போன்று, நம் வாழ்வில் இன்பத்தையும், நிம்மதியையும் சேர்த்துக் கொடுத்திடுவாள்.

மிளகும், சீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய், லவங்கம், பச்சைக்கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை நைவேத்தியமாகச் செய்து தேவியை வணங்கலாம்.

மந்திரம்:

ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ

என்ற மந்திரத்தை சொல்லி வழிபட அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.