ஒன்பது முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் பலன்கள்...!!

சிவபெருமானின் அம்சம் கொண்டவை ருத்திராட்சங்கள் ஆகும். அதிலும் நேர்மறை சக்திகளை அதிகம் கொண்ட 9 முக ருத்திராட்சம் அணிந்து கொள்வதால் தொழில், வியாபாரங்கள் செய்யும் மனிதர்களின் செல்வ நிலை உயர தொடங்கும். 
9 முக ருத்ராட்சம் சிவனின் பாதியான சக்தி தேவியின் அம்சம் கொண்டதாகும். இந்த ருத்ராட்சம் அணிபவர்களுக்கு அவர்கள் மேற்கொள்கின்ற எந்த தடை தாமதங்கள் ஏற்படாமல் காரிய வெற்றி உண்டாகும். 
 
செவ்வாய் தோஷம் நீங்கவும், செவ்வாய் பகவானின் நன்மையான பலன்களை பெறவும் 9 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வது நல்லது. கால  சர்ப்ப தோஷம் கால சர்ப்ப தோஷம் என்பது சிலரின் ஜாதகத்தில் ஏற்படுகின்ற ஒரு தோஷமாக இருக்கிறது. இந்த தோஷம் ஏற்பட்ட நபர்கள்  திருமண தடை, புத்திர தடை, பாம்புகள் போன்ற விஷ ஜந்துகளால் ஆபத்து போன்றவற்றை அனுபவிக்க நேரிடுகிறது. 9 முக ருத்ராட்சம்  அணிபவர்களுக்கு கால சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் பாதகமான பலன்களை குறைக்கிறது. 
 
பெண்கள் இன்றைய காலங்களில் உலகெங்கும் பெண்களுக்கு பல வகையான ஆபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் வெளியில் சென்று வீடு திரும்பும் வரை பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. மாதவிடாய் காலங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் பெண்கள் இந்த 9 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் அவர்களை அனைத்து வித ஆபத்துகளிலிருந்தும் காக்கும் கேடயமாக இந்த ருத்ராட்சம் செயல்படும்.
 
9 முக ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு எதிர்மறையான குணங்கள் நீங்கி, மேற்கூறிய சிறந்த குணங்கள் உண்டாக்கி வாழ்வில் அனைத்து நன்மைகளையும் பெற செய்யும்.
 
நரம்பு கோளாறுகள் உடலில் ரத்தத்தை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதும், தலையில் இருக்கும் மூளை உடலின் பிற உறுப்புகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு உறுப்பாக நரம்புகள் இருக்கிறது. இந்த நரம்புகள் வலுவோடு இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நரம்பு  தளர்ச்சி, மூளை சம்பந்தமான பாதிப்புகள் கொண்டவர்கள் 9 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் சிறப்பான பலன்களை பெறலாம். 
 
 
இதயம் சம்பந்தமான நோய்கள் கொண்டவர்கள், பிறவியிலேயே பலவீனமான இதயம் கொண்டவர்கள் எதற்கு பதட்டப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். இத்தகையவர்கள் 9 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் இதய படபடப்பு ஏற்படுவது குறைந்து இதயம் நலம்  காக்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :