1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (11:34 IST)

நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!

இறைவனின் அருளை விரைவாக பெறுவதற்கு உதவுவது நாம் ஏற்றும் தீபங்கள்தான். அதுவும் திருக்கோவில்களில் தீபம் ஏற்றுவது மிகச்சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும்.


அதிகாலை, நண்பகல், அந்தி பொழுதில் திருக்கோவில்களில் நெய் தீபம் ஏற்றுவது அதிக பலனை கொடுக்கும். இதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.

மிகக் கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிராகசிக்கும் தூங்கா விளக்கில் ஊற்றி வந்தால் போதும். இவ்வாறு நெய் தீபம் ஏற்றுவது உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப் போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது ஆகும்.

பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதை விட, திருக்கோவில்களில் ஒரு நெய் தீபம் ஏற்றுவது பலமடங்கு சிறந்தது. லக்ஷ்மிக்கு உகந்தது நெய் தீபம். நெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபட்டால் லட்சுமி நம் இல்லம் தேடி விரைவில் வருவாள்.

குலதெய்வம் நம் வீட்டிற்குவர சுத்தமான நெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.