1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (17:59 IST)

காயத்ரி மந்திரத்தின் சிறப்புகள் பற்றி சுவாமி விவேகானந்தர் !!

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் ‘பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.