வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

27 நட்சத்திரங்களுக்குரிய ருத்திராட்சங்கள் எவை தெரியுமா....!

சிவபெருமானின் மூன்று கண்களிலிருந்தும் தெறித்த கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின. வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற  ருத்திராட்சங்களும் தோன்றின. 
நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்களும் வெளிப்பட்டன. ஒரு முகம் முதல் 21 முகம் வரை கொண்ட ருத்திராட்சங்களும் உண்டு. ருத்திராட்சத்தின் மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம். ருத்திராட்ச மாலையின்  பெருமை என்று சொன்னால், ஏக முக ருத்திராட்சத்தின் அதி தேவதையாக பரமசிவனைக் கூறுவார்கள். 
 
இந்த ஏக முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவபெருமானின் அருள் பெற்று பிரமஹத்தி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாக ஒவ்வொரு  நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு முக ருத்திராட்சத்தைப் பயன்படுத்தவேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி உள்ளனர். 
 
எந்தெந்த நட்சத்திரத்திற்கு எந்த வகையான ருத்திராட்சம்:
 
1. அசுவினி - ஒன்பது முகம், 2. பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம், 3. கார்த்திகை - பன்னிரண்டு முகம், 4. ரோகிணி - இரண்டு முகம், 5. மிருகசீரிடம் - மூன்று  முகம், 6. திருவாதிரை - எட்டு முகம், 7. புனர்பூசம் - ஐந்து முகம், 8. பூசம் - ஏழு முகம், 9. ஆயில்யம் - நான்கு முகம், 10. மகம் - ஒன்பது முகம், 11. பூரம் -  ஆறுமுகம், பதிமூன்று முகம், 12. உத்திரம் - பன்னிரண்டு முகம், 13. ஹஸ்தம் - இரண்டு முகம், 14. சித்திரை - மூன்று முகம், 15. ஸ்வாதி - எட்டு முகம், 16.  விசாகம் - ஐந்து முகம், 17. அனுஷம் - ஏழு முகம், 18. கேட்டை - நான்கு முகம், 19. மூலம் - ஒன்பது முகம், 20. பூராடம் - ஆறுமுகம். பதிமூன்று முகம், 21.  உத்திராடம் - பன்னிரண்டு முகம், 22. திருவோணம் - இரண்டு முகம், 23. அவிட்டம் - மூன்று முகம், 24. சதயம் - எட்டு முகம், 25. பூரட்டாதி - ஐந்து முகம், 26.  உத்திரட்டாதி - ஏழு முகம், 27. ரேவதி - நான்கு முகம்.