திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தை கிருத்திகையில் சிறப்பு வழிபாடுகளும் பலன்களும் !!

சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். இது மிகவும் புண்ணியமான காலம் என்று புராணங்கள்  சொல்கின்றன.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌த்தில் மக்கள் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர்.
 
தை மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து கந்தவேளை வணங்கி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கம் என்பது ஐதீகம். சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம்.
 
மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.
 
சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது ‘தை’ மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்;  கட்டாயம் குழந்தையும் பிறக்கும். எனவே இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.