1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Some Useful Spiritual Tips not to do !!

சில செய்யக்கூடாத பயன்தரும் ஆன்மிக குறிப்புகள் !!

ஆன்மிக குறிப்புகள்
மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.
 
எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.
 
கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.
 
குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
 
செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.
 
பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான பொருட்கள் எவை தெரியுமா...?