ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆன்மீகத்தில் கடைப்பிடிக்கவேண்டிய சில விஷயங்கள் !!

செவ்வாய், மற்றும் புதன் கிழமைகளில் பகலிலும் வெள்ளிக்கிழமை முழு நாளுமே குத்து விளக்கைத் துலக்கக் கூடாது. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.

திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்கு சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும். வேறு எங்கும்  செல்லக்கூடாது.
 
ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.
 
மகாலட்சுமி நிற்கும் நிலையில் உள்ளபடம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். நிற்கின்ற நிலையில் உள்ள எந்த தெய்வமும்  உடனுக்குடன் பலன் தரும் என்பது ஐதீகம். அமர்ந்து இருக்கும் நிலையில் மகாலட்சுமி படத்தை வைத்து பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்க தாமதம் ஆகும். ஆனால் நற்பலன்கள் கிடைக்காமல் போகாது.
 
இறந்த முன்னோர்களின் படங்களை, சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.
 
வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.
 
புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
 
கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் எடுத்து இட்டுக் கொள்வதே நல்லது.