திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தீராத கடனையும் தீர்த்து வைக்கும் கணபதி வழிபாடு...!!

பொதுவாகவே விநாயகர் வழிபாடு என்பது ஒரு சுலபமான வழிபாடு. விநாயகரை நினைத்து நாம் எதை வேண்டிக் கொள்கின்றோமோ, அதை கட்டாயம் அவர் நிறைவேற்றி விடுவார் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். 
தீராத கடனை தீர்ப்பதற்கு எந்த கணபதியை, எப்படி வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தீராத கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு தோரண கணபதியை வழிபட வேண்டும். 
 
தோரண கணபதியை நம் வீட்டிலேயும் முறையாக வழிபடுவதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சினை தீரும். இதற்கு நம் வீட்டில் தோரண கணபதியின் புகைப்படம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இனி இல்லாதவர்கள் புதியதாக ஒரு படத்தை வாங்கி வைத்து, இரண்டு கைப்பிடி அளவு பச்சரிசி, அதே அளவு வெல்லம் இவை  இரண்டையும் வாழை இலையில் வைத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். 
 
இதை தோரணம் கணபதியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக நைவேத்தியமாகப் படைத்து ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து, தோரண கணபதியே என்  கடனை நான் அடக்க வேண்டும். தோரண கணபதியே விரைவில் என் கடன் தீர வழி காட்டவேண்டும். தோரண கணபதியே என் வாழ்க்கையில் ஐஸ்வர்யத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எந்த ஒரு குறைபாடும் இருக்கக்கூடாது. தோரண கணபதியே என் குடும்பம் எல்லா வகை செல்வங்களையும் பெற்று பரிபூரண அருளை  அடைய வேண்டும். ஓம் தோரண கணபதி நம. ஓம் தோரண கணபதி நம! ஓம் தோரண கணபதி நம. இப்படியாக மனமுருகி வேண்டிக் கொண்டு நீங்கள் பிசைந்து வைத்திருக்கும் பச்சரிசியையும், வெல்லத்தையும் உங்கள் கைகளால் கொழுக்கட்டை பிடிப்பது போல நன்றாக 3 உருண்டைகளை பிடித்து வாழையிலையில் வைத்து  வேண்டிக் கொள்ளவேண்டும். 
 
பின்பு அந்த உருண்டைகளை எடுத்து காக்கை குருவி இவைகளுக்கு போட்டுவிடலாம். இந்தப் பரிகாரத்தை உங்களது கடன் பிரச்சனை தீரும் வரை செய்துகொண்டே  இருக்கலாம். வாரம்தோறும் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளி இந்த இரண்டு தினங்களிலும் இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.