வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ராகு கேது தோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள் !!

பொதுவாக நமது வாழ்வில் நடக்கும் அனைத்து இன்ப துன்பங்களுக்கும் நவகிரகங்களே காரணம் என்று கூறப்படுகிறது. 


சிலரது ஜாதகத்தில் சில நவகிரகங்களின் தோஷம் இருப்பதால் சில சிக்கல்கள் விளைகின்றன. அத்தகைய தோஷங்களை எளிய முறையில் போக்கி வாழ்வில் வளம்பெற செய்யும் எளிய பரிகாரங்கள்  செய்வதனால் நீங்கும்.
 
ராகு தோஷம் நீங்க:
 
ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை அன்றும், ராகு தசை மற்றும் ராகு புக்தி காலத்திலும்  விரதம் இருந்து, ராகு பகவானுக்கு ராகு காலத்தில் மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து, உளுந்தால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத்தியம் செய்து, ராகு  காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வரவேண்டும். அதோடு ராகு காலத்தில் துர்கை அம்மனையும் வழிபட்டு வந்தால் ராகு தோஷம் நீங்கும்.
 
கேது தோஷம் நீங்க:
 
ஒருவரது ஜாதகத்தில் கேதுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட திங்கட்கிழமை அன்றும், கேது தசை மற்றும் கேது புக்தி காலத்திலும்  விரதம் இருந்து, கேது பகவானுக்கு பல வகை மலர் கொண்டு அர்ச்சனை செய்து, சித்ரான்னம் நைவேத்தியம் செய்து, கேது காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து  வர வேண்டும். அதோடு விநாயகப் பெருமானையும் தொடர்ந்து வழிபட்டு வர கேது தோஷம் விலகும்.