திங்கள், 20 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வரும் சூரிய பகவான்...!

காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.

இந்த கிரகத்தை மையமாக வைத்தே அனைத்து கிரகங்களும் இயங்கி வருகிறது. சூரியன் வான்வெளியில் தன்னைத் தானே சுற்றி சந்திரன் வருகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரியனின் வாகனம். 
 
ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே! கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. சூரியனின் அருளால் வடமொழி அறிவு ஏற்படும். உஷா தேவி, சாயா தேவி ஆகிய இரு தேவிகளுடன் சூரியனார் கோவிலில் சூரியன் விளங்குகிறார்.
திசை - கிழக்கு
அதிதேவதை - அக்னி
ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை, எருக்கு
வஸ்திரம் - சிவப்பு
ரத்தினம் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்.
 
சூரிய பகவானின் காயத்ரி:
 
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்.