1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Seeing the Moondram Pirai Benefits....!!

மூன்றாம் பிறையை தரிசிப்பதால் உண்டாகும் பலன்கள்..!!

மூன்றாம் பிறை
பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வது நல்லது.

மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.
 
* மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.
 
* நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.
 
* ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.
 
* ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.
 
* ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.
 
* பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.
 
* வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.
 
* நீடித்த பிறை தரிசனம் முத்திப்பேறு கிடைக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
வீட்டு வாசலில் மாவிலை மற்றும் வேப்பிலை தோரணம் கட்டுவது ஏன்.....?