1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை !!

வினை தீர்ப்பான் வேலவன் என்பது வெறும் வாரத்தை அல்ல. அவரின் அருளால் வினை நீங்கப் பெற்ற அவரது அடியார்களின் அனுபவபூர்வ வாக்காகும். அப்படிப்பட்ட முருகனுக்குரிய ஒரு சிறப்பான தினம் “சஷ்டி தினம்”.

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி தினமும் சிறப்பானது தான். அப்படிப்பட்ட சஷ்டி தினத்தில் முருகப்பெருமானின் அருளைப் பெற “சஷ்டி விரதம்”  அனஷ்டிக்கும்  முறையயையும், அதன் பலன்களைப் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.
 
சஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும். பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால், பழம் நிவேதனம் வைக்க வேண்டும். 
 
காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் அப்பூஜையறையில் அமர்ந்து “கந்த சஷ்டி கவசத்தையோ’ வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள்  முழுவதுமோ அல்லது உங்களால் முடிந்த வரை ஜெபிக்க வேண்டும். 
 
வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள்,  ஓம் முருகா என்று மனதிற்குள் ஜபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம். இந்த சஷ்டி விரத தினத்தன்று புலால்  உணவுகளையோ, போதை வஸ்துக்களை யோ விரதமிருப்பவர் உண்ணக்கூடாது. மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு  இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். 
 
இந்த சஷ்டி விரதத்தை நல்ல உடல்நிலைக் கொண்டவர்கள், அவர்களால் முடிந்தால் மூன்று வேளை உணவருந்தாமலும், அப்படி யில்லையெனில் ஓன்று அல்லது  இரண்டு வேளை உணவு உட்கொண்டு மேற்கொள்ள லாம்.வயதானவர்கள்,கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இவ்விரதத்தை  மேற்கொள்ளலாம்.