சாய் பாபாவின் இந்த மந்திரத்தை ஜெபிப்பதால் கிடைக்கும் பலன்கள்...!

ராட்டினம் போல் பல ஏற்ற, இறக்கங்கள் கொண்ட தொடர் சுழற்சி தான் மனித வாழ்க்கையாகும். இன்பங்கள் வரும் போது மிகவும் மகிழ்வதும், துன்பங்கள் அதிகரிக்கும் போது மிகவும் வருந்துவதும் நமது இயல்பாகிவிட்டது. 
இன்ப, துன்பங்களை ஒரு ஞானியை போல சமமாக கருதும் மனநிலை நமக்கு அமைய கிடைத்தால் அது நமக்கு வரம் தான். ஒருவரின்  மனதில் உள்ள தேவையற்ற கவலைகள் மற்றும் பயங்களை போக்கும் வல்லமை கொண்ட சாய் பாபாவின் பதம் பணிந்து அவருக்கான இந்த  சாய் பாபா மந்திரம் அதை ஜெபிப்பதன் மூலம் நமது கவலைகளும் துன்பங்களும் காற்றில் கரையும்.
 
மந்திரம்:
 
“ஓம் சாய் குருவாயே நமஹ
ஓம் ஷீரடி தேவாயே நமஹ
ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ”
 
இம்மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு இறைவனை வணங்கி “ஸ்ரீ சாய் பாபாவை” மனதார நினைத்து இம்மந்திரத்தை 9  முறை கூறவேண்டும். 
 
மேலும் வியாழக்கிழமைகளில் சாய் பாபா கோவிலுக்கு சென்றோ அப்படி முடியாதவர்கள் வீட்டில் சாய்பாபா படமிருந்தால், அந்த படத்திற்கு  முன்பு சிறிது முந்திரி பருப்புகளையோ அல்லது கற்கண்டுகளையோ நிவேதனமாக வைத்து இம்மந்திரத்தை 108 முறை ஜெபித்து சாய்  பாபாவை வழிபட, உங்களின் மனதிலிருந்த இருந்த இனம் புரியாத பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள். 


இதில் மேலும் படிக்கவும் :