1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

நவக்கிரக தோஷங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு....!

சிவபெருமானின் புதல்வர் மற்றும் ஓம்காரத்தின் வடிவம் ஆவார். புராணங்களின் படி சனீஸ்வர பகவானின் சனிபார்வைக்கு தெய்வங்கள் கூட  தப்ப முடியவில்லை.
இந்த சனிபகவான் விநாயகப்பெருமானையும் பிடிக்க நினைத்து ஒவ்வொரு நாளும் விநாயகரை பிடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.  ஆனால் ஒவ்வொரு முறையும் தனது கடமையிலிருந்து தவறாத, காலத்தை விட வேகமாக இருந்த விநாயகரை பிடிக்க முடியாமல் தோற்று,  விநாயகரை வணங்கி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அவரிடம் ஆசிகள் பெற்றார். சனிபகவான். இப்படி பல சிறப்புகள் மிக்க விநாயகரை தொழுவதன் மூலம் நமது கடமைகள் அனைத்தும் தடையின்றி நடக்கும்.
 
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நன்மையோ தீமையோ அவற்றை நிர்ணயிப்பது கிரகங்களே. நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர். விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக  விநாயகர் தனிச்சிறப்புடையது. ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார். 


 
இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழக்கையிலும், வியாழனைத்  தலையிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது  தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் நவக்கிரகதோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.