1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

செல்ல வளத்தை அதிகரிக்க செய்யவேண்டிய பரிகாரங்கள் !!

வீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி அமருமாறு தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் செல்வ வளம் அதிகரிக்கும்.

நீங்கள் தங்கும் வீட்டின் முன் உயரமான கட்டிடங்களோ அல்லது கோவிலோ இருந்தால், அவை வீட்டில் உள்ள செல்வ வளத்தை குறைக்கும். ஒருவேளை அந்த  உயரமான கட்டிடம் அல்லது கோவிலின் நிழல் வீட்டில் படாதவாறு இருந்தால், அந்த வீட்டில் குடியேறலாம். இல்லையெனில் அந்த வீட்டில் தங்குவதைத்  தவிர்த்திடுங்கள்.
 
வீட்டின் மையப் பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். எப்போதுமே வீட்டின் மையப்பகுதி ப்ரீயாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வம் கொட்டும்.
 
வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மிகவும் அழுக்குடன் இருந்தால், பின் வீட்டில் உள்ள செல்வம் பறந்து  போகும்.
 
வீட்டில் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம். குடும்பத் தலைவர் வீட்டின் வடகிழக்குப் பகுதியில்  தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
 
வீட்டின் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடிய நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் அப்படியே இருந்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.