1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பணப்பிரச்சினை வராமல் இருக்க செய்யவேண்டிய பாரிகாரங்கள் !!

இந்த வசம்பில் ஒரு சிறு துண்டை வாங்கி உங்கள் பர்ஸில் வைத்துக்கொண்டால் கூட, உங்கள் பர்ஸில் இருக்கும் பணத்திற்கு பிரச்சினை வராது. பர்ஸில்  இருக்கும் பணம், செலவு ஆனாலும் திரும்பவும் வருமானம் சீக்கிரமே வரும். 

காலையில் நீங்கள் எழுந்து குளித்து முடித்துவிட்டு, ஒரு மண் அகல் விளக்கில், சிறிது பசு நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏற்றி வைத்திருக்கும்  தீபச்சுடரில், இந்த வசம்பை காட்டினாலே, லேசாக அந்த வசம்பு கருப்பு நிறமாக மாறும். 
 
அதன் பின்பு அந்த விளக்கில் இருக்கும் நெய்யை சிறிதளவு, உங்கள் கை மோதிர விரலில் தொட்டு, வசம்பின் இருக்கும் கரு நிறத்தை தொட்டால், கருப்பு விரலில்  ஒட்டிக் கொள்ளும். லேசாக ஒட்டியிருக்கும் அந்த கருப்பு மையை உங்களது உச்சந்தலையில் லேசாக வைத்துக் கொள்ள வேண்டும். நெற்றியிலும் லேசாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி இந்த பரிகாரத்தை செய்து விட்டு, நீங்கள் எந்த ஒரு செயலுக்கு சென்றாலும், அதில் பல மடங்கு அதிகமான வெற்றி கிடைக்கும்  என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 
 
தொழில் தொடங்குவதாக இருந்தாலும் சரி. கடனை வசூலிக்க சென்றாலும் சரி. எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி சுலபமாக ஒரு தீர்வு கிடைக்கும். ஒரு  நல்ல காரியத்திற்கு கிளம்பும் போது கூட, இப்படி இந்த மையை இட்டுக் கொண்டு கிளம்பும் பட்சத்தில், அந்த காரியம் சுபமாக முடிந்து விடும் என்பதில் சந்தேகமே  இல்லை. 
 
48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முயற்சியும் அவசியம் என்பதை மறந்துவிடக்கூடாது. குழந்தைகளுக்குக்கூட சிறுவயதில், மைக்கு  பதிலாக, இந்த வசந்த குழைத்து நெற்றியில் வைக்கும் பழக்கம் உண்டு.