1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அனுமன் பக்தர்களை சனி பகவான் தொந்தரவு செய்யாததன் காரணம் என்ன தெரியுமா?

அனுமன் பக்தர்களை சனி பகவான் தொந்தரவு செய்யாததன் காரணம் என்ன தெரியுமா?
அனுமன் தன் கல்வியை கற்று முடித்த பிறகு, தனது குருவான சூரிய பகவானிடம் குருதட்சணையாக அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

சூரிய பகவான் குருதட்சணை எதுவும் வேண்டாமென்று கூறிவிட்டார். ஆனால், அனுமன் வற்புறுத்தவே பின்னர் சூரிய பகவான் தன் மகனான சனி தேவனின்  கர்வத்தை அழிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
 
அனுமன் சனி லோகத்திற்கு சென்று சனி தேவனைப் பார்த்து அவரது வழிகளைத் திருத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார் ஆனால், சனி தேவனோ கோபம் கொண்டு, இறைவன் அனுமனின் தோளின் மீது தாவி ஏறி, தனது முழு பலத்தையும் கொண்டு, அனுமனைத் தாக்க முயற்சித்தார். அனுமன் தனது உருவத்தை  மிகப் பெரியதாக அதிகரித்துக் கொள்ளத் தொடங்கினார்.
 
அவர் மிகப்பெரிய உருவமாக ஆன பிறகு தோளிலிருந்த சனிபகவான் மேற்கூரையில் இடித்துக் கொண்டு நசுங்கினார். அது அவருக்கு அளவில்லாத வலியை ஏற்படுத்தியது. யாராலும் தப்பிக்க முடியாததாகக் கருதப்பட்ட சனி தேவனின் கர்வம் உடைந்தது. அவர் இறைவன் அனுமனிடம் மன்னிப்புக்கோரி, தனது சக்திகளால் அனுமனின் பக்தர்களை ஒருபோதும் பாதிப்பதில்லை என்ற வரத்தை அளித்தார்.