ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2023 (15:09 IST)

புரட்டாசி மாத ராசி பலன்கள் 2023 – துலாம்

புரட்டாசி மாத ராசி பலன்கள் 2023 – துலாம்


கிரகநிலை:
ராசியில் கேது, சந்திரன்  - சுக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ), ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்  - லாப ஸ்தானத்தில் புதன்  - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய்; சூர்யன்என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:
27-09-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-09-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-10-2023 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று ராகு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-10-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
கனிவான பேச்சும் நலினமான தோற்றமும் உடைய  துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும்.

குடும்பத்தில் திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கபெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் கெயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள். பெண்கள் பணியில் ஈடுபட்டுள்ள தொழில் மேன்மை பெறுவார்கள்.

கலைத்துறையினர் நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் சுமூகமான உறவு ஏற்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.  பாடங்களில் கவனம் செலுத்துவது  அதிகரிக்கும்

சித்திரை - 3, 4:
இந்த மாதம் தொழில் வியாபாரம்  சுமாராக நடக்கும்.  பழைய பாக்கிகள் வசூல்  ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மிகவும் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது.

ஸ்வாதி:
இந்த மாதம் பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது  தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

விசாகம் - 1, 2, 3:
இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும்.  மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில்  கவனம் தேவை.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சாத்தி வழிபடவும்
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி
சந்திராஷ்டம தினங்கள்: அக் 3, 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 27, 28