வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் போக்குமா வெற்றிலை தீபம்...?

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. 






வெற்றிலையோடு, பாக்கும் சேர்வது மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அம்சமாகும். எல்லா செடியும் துளிர்த்து இலையாகி, மொட்டாகி, பூத்து, காய்த்து கனியாகும். அந்த செடிக்கேற்ப இலை, காய், கனின்னு அடுத்தவங்க பசியாற பயன்படும். ஆனால், வெற்றிலை கொடியில் மட்டும் இலை மட்டுமே உருவாகும்.  பூவோ, காயோ, கனியோ உண்டாகாது. 

கடவுளுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் நிறைவுபெறுவதில்லை. 
 
சிறப்பு வாய்ந்த வெற்றியிலையில் தீபம் எப்படி ஏற்றி வழிபட வெற்றிகள் தேடி வரும். முதலில் சேதாரம் இல்லாத, நுனிப்பகுதி உள்ள 6 வெற்றிலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரிபோட்டு வைக்கவும். அதன்பின், கிழித்து வைத்த 6 வெற்றிலை காம்புகளையும் நல்லெண்ணெய்குள் போட்டுவிட்டு, தீபத்தை ஏற்றவும்.

தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கு அடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றிலையில் இருந்தும் நல்ல நறுமணம் வீசும். 
 
இந்த நறுமணத்தை நன்றாக சுவாசம் செய்து தீபத்தை நோக்கியவாறு, உங்கள் குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதில் நினைத்துக்கொண்டு, ஐந்து  நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து பிரார்த்தனை செய்தால் போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது விரைவாக தீர்ந்துவிடும்.