வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வாராஹி அம்மனை வழிபட உகந்த மந்திர வழிபாடு !!

ஸ்ரீவாராஹி அம்மனை செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் தினமும் அஷ்டோத்திரம் சொல்லி, குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவது கூடுதல் சக்தியைக்  கொடுக்கவல்லது.


அஷ்டோத்திரத்தில் உள்ள அந்த அம்மனின் நாமாக்களைச் சொல்லியும் வழிபடலாம். தினமும் காய்ச்சிய பாலில் சர்க்கரை கலந்து  நைவேத்தியம் செய்யலாம்.
 
பஞ்சமி, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் தேங்காய்ப் பூரணம், சர்க்கரைப் பொங்கல், கேசரி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் செய்யலாம். அதோடு,  சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
 
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்.
 
வாராகி அம்மன்:
 
ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
 
இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம்  பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும். 
 
பொதுவாகவே கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராகி அம்மனை மனதார வழிபட்டாலே போதும். அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும். இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராகி அம்மனை வழிபடுவது சிறந்தது.