திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (11:26 IST)

மாசி மாத ராசிபலன்கள் 2024! – கன்னி!

Monthly astro
எதிர்காலம் பற்றிய சிந்தனையில் இருக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின் போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.



தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.

அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்
இந்த மாதம் குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மனநிம்மதி ஏற்படும். தொலை தூரப்பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

அஸ்தம்:
இந்த மாதம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும்.  எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி