முருகப்பெருமானை வழிபட உகந்த மந்திரங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Lord Murugan
Sasikala|
கடவுளின் உண்மைநிலையை உணர்த்த வல்லதுமான ஜோதி வழிபாடு மட்டுமே. அதுவே உண்மையும் கூட. கடவுளின் வடிவம் ஜோதி வடிவமே. 

அருட்பெருஞ்ஜோதி சுடரான முருகனை வழிபட அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தமாகிய பொழுதிலே எழுந்து ஒரு நெய் 
 
தீபமோ அல்லது நல்லெண்ணெய் தீபமோ ஏற்றி, தீபத்தின் முன் அமர்ந்து “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் 
 
திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ முருகப்பெருமானின் நாமங்களை மனம் உருகி சொல்லி பூஜித்திட வேண்டும்.
 
வாழ்வில் ஒரு முறையேனும் இப்படிப்பட்ட புனிதமான வழிபாடாகிய ஜோதி வழிபாட்டினை ஒருவன் செய்து வருவானேயானால் அவன் செய்த அந்த ஒரு வேளை 
 
ஜோதி வழிபாட்டின் பலன் என்னவெனில் கடுமையான விரதமிருந்து 100 ஆண்டு தவம் செய்ததற்கு ஒப்பான தவப் பயனை பெறுவார்கள் என்பது உண்மையாகும்.
 
ஏனெனில் வேறெந்த விதமான விரதமுறை வழிபாட்டிலும் வெளிப்பட முடியாத முருகப்பெருமான் ஜோதி வழிபாட்டில் அவர்கள் ஏற்றும் ஜோதியிலே உடன் 
 
தோன்றி அருள் செய்வதினாலே ஜோதி வழிபாடு உடனடியாக முருகனது ஆசிகளை பெற்றுத்தர வல்ல வல்லமை மிக்கதான வழிபாடாகும்.


இதில் மேலும் படிக்கவும் :