கரூர்: அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பன் ஆலயத்தில் மாபெரும் 1008 குத்துவிளக்கு பூஜை!!

கரூர் அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பன் ஆலயத்தின் முன்பு உலக நன்மைக்காக மாபெரும் 1008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பன் ஆலயத்தில், ஆண்டு தோறும் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா  சேவா சங்கத்தின் ஆண்டு விழா நடைபெறும்.
இந்தாண்டு 32 ஆம் ஆண்டு விழாவாக ஸ்ரீ சந்தானகோபாலகிருஷ்ண ஹோமத்துடன் நடைபெற்று வருகின்றது. 22 ம் தேதி தொடங்கிய. இந்த ஹோமத்தில் பக்தர்கள் கலந்து கொண்டால் உலகத்தில் வாழும் அனைவருக்கும் சகல ஐஸ்வர்யங்கள், மற்றும் குழந்தை பேரு குடும்பத்தில்  மனஅமைதி,  நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், தொடர்ந்து 23, 24, 25, ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் தொடர்ந்து  பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்தாண்டு சுவாமி ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு சிறப்பாக கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா சேவசங்கம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட  மக்கள் மீளவேண்டும் என்றும் அனைத்து குடும்பங்களின் கவலைகள் தீரவும் சகல செல்வமும் பெருக வேண்டும் என்று 1008 குத்து விளக்கு பூஜை ஐயப்பன் ஆலயம் முன் நடைபெற்றது. இந்த குத்து விளக்கு பூஜையில் பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  தங்களுடைய வாழ்வின் இருளை நீக்கி சகல செளபாக்கியம் வேண்டியும், உலக நன்மைக்காகவும் விளக்கேற்றி இறைவனை வழிபட்டனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :