வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றிய கார்த்திகேயன்

ஒரு கடவுளைப் பல பெயர்களால் பூஜிப்பது இந்து மதத்தில் வழக்கமான ஒன்று. ஒவ்வொரு பெயரும், அந்தக் கடவுள் அவதாரக் காரணம், அற்புத சக்தி, உடல்  தோற்றம், ஏந்திய ஆயுதம் என இன்னும் பல காரணங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
தமிழ் கடவுள் முருகன் என்றழைக்கப்படுகிறார். தமிழ் மொழியை வடிவமைத்த கடவுள் இவரே. அதனாலேயே இவரை தமிழ் கடவுள் என்று அழைக்கிறோம்.  ‘முருகன்’ என்றால் அழகுடையவன் என்று ஒரு பொருள். 
 
சரம் என்றால் மூச்சு என்று பொருள். சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம் என்பது இவரது  தத்துவம். சரத்தை வணப்படுத்திக் கட்டியதாலே இவருக்கு சரவணன் என்ற சிறப்பு பெயர் வந்தது.
 
சிவனின் நெற்றி கண்ணில் இருந்து தோன்றிய ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்து வர, பின் ஒருநாள் அந்த ஆறு குழந்தைகளுக்கும்  தாயான பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கையில், பன்னிரு கரங்களோடும் ஆறு முகத்தோடும் முருகன் தோன்றினார் என்கிறது  கந்த புராணம்.
 
கிரவுஞ்ச மலையாக நின்ற தாரகாசுரனை அழிக்கவும், சூரபத்மனை அழிக்கவும், தாய் பார்வதி தேவியிடமிருந்து ‘வேல்’ எனும் ஆயுதத்தைப் பெற்றார். ஆயுதமாக வேல் வைத்திருப்பதால் ‘வேலாயுதன்’ என அழைக்கப்படுகிறார். வேல் மூலம் பக்தர்களின் அறியாமையை அழித்து அறிவை நிலைநாட்டுவதாக  நம்பிக்கை உள்ளது.