புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (10:15 IST)

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – மேஷம்!

Monthly Astro Image
கிரகநிலை:
ராசியில் சந்திரன், செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-07-2024 அன்று சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-07-2024 அன்று செவ்வாய் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-07-2024 அன்று சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
பொருளாதாரத்தில் கெட்டிக்காரர்களான மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் பிடிவாதத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும்.

குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். கடன் கொடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொடுக்கவும். காப்பாற்ற முடியாமல் போகலாம். தைரியம் சிறக்கும். அதற்காக அசட்டு தைரியம் எதிலும் கூடாது. இளைய சகோதரத்திடமிருந்து அனுகூலம் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் யோகம் உண்டு. பயன்படுத்தி கொள்ளவும்.

உத்யோகஸ்தர்களுக்கு உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.

தொழிலில் லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது.

கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் நேரத்தை வீணாக்காமல் படிக்கவும். வெற்றி நிச்சயம். குறுக்கு வழிகளை நாடக்கூடாது. 

பெண்களுக்கு உடல்நிலையில் கவனம் தேவை. மருத்துவத்திற்கு என சேமிக்க பழகுங்கள். திடீர் செலவுகள் வந்து கடுப்பேற்றலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள்.

அஸ்வினி:
இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.

பரணி:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும்.

பரிகாரம்: தினம்தோறூம் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10, 11