செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

யாரை எவ்வாறு வணங்க வேண்டும் என்பது தெரியுமா...?

பிரம்மா, விஷ்ணு, சிவன் இம்மூவரை வணங்கும் போது, சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும்.
குருவை வணங்கும் போது, நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும்.
 
அரசரையும், தகப்பனாரையும் வணங்கும்போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.
 
பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும்.
 
தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும்.
 
மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பூமியில் நெடுஞசாண் கிடையாக  வணங்க வேண்டும். 
 
ஆனால் பெண்கள், மாதா, பிதா, குரு, தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது.