1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-08-2018)!

இன்று ஆகஸ்டு 9 வியாழக்கிழமை. இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேஷம்:
 
இன்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி  இருக்கும். 
 
ரிஷபம்:
 
இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல்  சாதகமாக வரும். பணவரத்து கூடும். 
 
மிதுனம்:
 
இன்று வாழ்வில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. 
 
கடகம்:
 
இன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த  இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். 
 
சிம்மம்:
 
இன்று எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல் படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.  எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். 
 
கன்னி:
 
இன்று புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம்  தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.
 
துலாம்:
 
இன்று குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து  கொள்வது நன்மை தரும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. 
 
விருச்சிகம்:
 
இன்று பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். புதிய நட்புகள் கிடைக்கும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 
 
தனுசு:
 
இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். 
 
மகரம்:
 
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம்.  மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.
 
கும்பம்:
 
இன்று எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மன குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. புதன் சஞ்சாரம்  பயணங்கள் மூலம் நன்மையை தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். 
 
மீனம்:
 
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு  சாதகமான பலன் காண்பார்கள்.