சனி மஹா பிரதோஷ வழிபாட்டின் முக்கிய அம்சங்கள் !!
சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது.
சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம்.
ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். என்கிறது சிவாகமம். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம்
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. பிரதோஷ வேளையில், சிவபெருமானையும்,நந்தி தேவரையும் வணங்குவது மிகுந்த பலன்களை வழங்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
வீட்டில் விளக்கேற்றி இறைவனை வழிபடலாம். அருகில் இருக்கும் ஆலயங்களில் சிவ தரிசனம் செய்யலாம். சனிபகவானால் ஏற்படுத் தோஷம் நீங்கும்.
சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு உகந்தது. சனியின் பார்வையால் நிகழும் கெடுபலன்கள் நீங்க பிரதோஷ வழிபாடு மிகவும் உகந்தது.
சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட சனிதோஷங்கள் முற்றிலும் நீங்கும். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட சனிபகவான் தன் அருள்பார்வையைக் காட்டியருள்வார்.
பிரதோஷ காலத்தில் முறைப்படி சிவபெருமானையும் நந்திதேவரையும் ஒருங்கே தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். அமைதி, ஆனந்தம் வாய்க்கும் முக்தி கிடைக்கும்.
பிரதோஷ காலத்தில் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம், பன்னிரு திருமுறைகள், தேவாரம் திருவாசகப் பாடல் கள் பாடி வழிநட ஈசனருள் பூரணமாக கிட்டும். அவனருளாலே ஆனந்தம் பெருகும்.