உண்மையை விரும்பும் நீங்கள், மறைத்துப் பேசுபவர்களை கண்டால் கோபப்படுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். எந்த ஒரு வேலைகளையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்பை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். வாகனத்தில் செல்லும் தவறாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. தங்க நகைகளை கவனமாக கையாளுங்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.