1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Gayatri Mantra chanting amazing benefits...!!

காயத்ரி மந்திரம் ஜபிப்பதால் உண்டாகும் அற்புத பலன்கள்...!!

காயத்ரி மந்திரம்
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும்.

காயத்ரி என்பதற்கு தன்னஈ ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள், இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லாமந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.
 
இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.
 
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும்,  மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
 
காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.
 
சப்த சிரஞ்சீவிகள், 27 நட்சத்திரங்கள், மகாலட்சுமி கடாக்ஷம் கிடைக்க, கடன் தொல்லை நீங்கும். அஷ்ட சித்திகளை பெற, சகல காரியங்களும் சித்தி பெறலாம்.  சகல தோஷங்களும் விலகும். வாஸ்து தோஷத்திலிருந்து நிவர்த்தி அடையலாம்.
 
காயத்ரி மந்திரம்: 
 
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சப்த கன்னியர்களில் ப்ராம்மி அம்பிகையின் காயத்ரி மந்திரங்கள்...!!