1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Fasting methods to be observed on Ratha Saptami day !!

ரத சப்தமி நாளில் கடைப்பிடிக்கவேண்டிய விரத முறைகள் !!

சூரிய பகவான்
சூரியனை விரதமிருந்து வழிபட்டால் வாழ்வில் அனைத்து நலங்களும் தடையின்றி வந்து சேரும். இந்த விரதம் இருந்து வழிபட உகந்த நாள் ரத சப்தமி.


ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர் பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதியன்று திங்கட்கிழமை ரத சப்தமி வருகிறது.

இந்த ரத சப்தமியன்று புண்ணிய ஆறு கள் மற்றும் தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராடி சூரிய பகவானை வழி்படுவர். உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது இந்த ரத சப்தமி.

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. செல்வம் பெருகும் இந்த விரதம் எளிமையானது.

ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, மூடிய இரு கண்களில் கண் ஒன்றுக்கு ஒன்று வீதம் இரண்டு, அதுபோல தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டு வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி  செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர் நிலையை அடைவர். கணவனை இழந்த வர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள்.

அன்றைய நாள் தியானம் செய்ய உகந்தது. அன்றைய தினம் சூரிய உதயத்தின் போது இவ்வாறு எருக்க இலையை தலையில் வைத்துக் குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கிறது புராணம்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சூரியனின் பிறப்பு பற்றி கூறப்படும் புராணக்கதை என்ன தெரியுமா...?