1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Eight directions, Load the lamp Benefits Available...!

எட்டு திசைகளும், தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்களும்...!

தீபங்கள்
கிழக்கு திசை:  இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோசம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிட்டும். வீடு இல்லாதவர்கள் வீடு  வாங்குவார்கள்.
மேற்கு திசை:  இத்திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும்.
 
வடக்குத் திசை:  இத்திசையில் தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம்  கைகூடும்.
 
தெற்கு திசை:  வீட்டில் இத்திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது. மரண பயம் உண்டாக்கும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லதவர்கள் கோவிலில்  தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரலாம்.

கோபுர கலசத்தில் தானியங்களை பயன்படுத்துவதன் காரணம்....?

தென்கிழக்கு திசை:  இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டியாக விளங்குவர். இதற்கு  தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.
 
தென்மேற்கு திசை: இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள் நீங்கும்.
 
வடகிழக்கு திசை:  இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர்தம் பிள்ளைகளும்  தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.
 
வடமேற்கு திசை: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.
அடுத்த கட்டுரையில்
லஷ்மி கடாட்சம் பெருக்கும் ஆன்மீக குறிப்புகள்..!!