1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பசுவுக்கு இவ்வாறு செய்வதால் பித்ரு தோஷங்கள் நீங்குமா...?

பசுவை பூஜித்தால் பிரம்மா, வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். 

நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி  கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.
பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
 
பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும். " மா " என்று  பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.
 
ஒருவர் இறந்த பின்  ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு  வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.