வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளதா...?

பச்சை கர்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.

பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது.
 
பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.
 
பச்சை கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும்.
 
2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். 
 
தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில்  போட்டு வைக்கலாம்.
 
நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வாசனை மிகுந்த  இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள்.