திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 14 ஏப்ரல் 2022 (11:15 IST)

சிவபெருமானின் முதல் சீடர் யார் தெரியுமா...?

Lord Nandi
தகுதி உடையவர்கள் தமது தானம், தவம் முதலியவற்றால் உயர்நிலையை எளிதில் அடைந்துவிடுவர். தகுதி இல்லாதவர்கள், வினைப்பயன்களால் துன்புறுபவர்கள் இறைவனின் திருவடியை அடைவது எளிதன்று.


அப்படிப்பட்டவர்களுக்காகவே இந்த உலகில் இறைவன் தன் அம்சமாக மகான்களைப் படைக்கிறார். சீடனின் தகுதியால் அல்ல; குரு தன் தகுதியால் அவர்களை உயர்நிலைக்கு உயர்த்தி இறைவடின் திருவடியில் சேர்க்கிறார்.

சிவபெருமானே ஜகத் குரு என்று போற்றப்படுபவர். அவரே சனகாதி முனிவர்களுக்கு பிரம்மம் குறித்து உபதேசம் செய்தவர். சிவபெருமானுக்கு மொத்தம் எட்டு சீடர்கள் என்கிறது சைவ சித்தாந்த மரபு. சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி என்பவர்களோடு முதன்மைச் சீடராக விளங்குபவர் நந்தி தேவர்.

நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள்.

தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும்.

இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்கவேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபடவேண்டும் என்பதுதான்.