1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 14 ஏப்ரல் 2022 (09:25 IST)

வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தின் சிறப்புக்கள் !!

Pradosham
இன்று  ஏப்ரல் 14-04-2022, சுபகிருது வருடம், சித்திரை 1, வியாழக்கிழமை, குரு வார பிரதோஷம். இன்று குரு பிரதோஷம். சிவபெருமானையும், நந்தியெம்பெருமானையும் வணங்கி வழிபட்டு, பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கினால் நம் வாழ்வில் இருக்கும் குறைகள், கவலைகள் நீங்கி சுகத்தை அருள்வார்.


வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.

வியாழக்கிழமைகள் குருபகவானுக்கு உரியவை. இந்த நாளில் பொதுவாகவே தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறப்பு என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அதிலும் பிரதோஷத்தோடு சேர்ந்துவந்தால் அந்த நாள் மிகவும் சிறப்புவாய்ந்தது.

வியாழக்கிழமைகளில் இறைவழிபாட்டோடு மகான்களின் வழிபாட்டையும் செய்துவருவோம். காரணம் இந்த உலகில் குருவாகத் திகழ்கிறவர்கள் மூலம் அந்த இறைவனின் திருவடியை அடையலாம் என்பது நம்பிக்கை. அதனால்தான் அருணகிரிநாதரும் ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்று குருவாக வந்து அருளும்படி முருகக் கடவுளை வேண்டினார்.