வியாழன், 5 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

முருகனின் ஆறுபடை வீடுகள் என்னென்ன தெரியுமா...?

முருகனுக்கு உகந்த நாளாக கிர்த்திகை தினம் உள்ளது. கிருத்திகை தினத்தை முன்னிட்டு தமிழகத்திலுள்ள பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும்  வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். 


பழநி: பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில்  நிற்கும் இடமே பழநி.
 
திருச்செந்ததூர்: கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும்.
 
திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம்.
 
சுவாமிமலை: தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை.
 
திருத்தணி: முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி.
 
பழமுதிர்ச்சோலை: குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.