ராசி கற்களின் சக்திகளைப் பற்றி நமது மகான்களும், ரிஷிகளும் புராணங்களில் கூறியிருக்கிறார்கள். எப்படி ஒரு பெரிய கட்டிடம் கட்டி அதில் இடி தாங்கியை பொருத்தி ஆபத்து வராமல் தடுக்கப்படுகிறதோ அதே போல ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க நாம் தகுந்த ராசி கற்களை அணிய வேண்டும்.
1. மேஷம் - ராசி மேஷமாக இருந்தால், வைரம் மற்றும் மணிக்கல் அணிந்தால், அதிர்ஷ்டம் பொங்கும்.
2. ரிஷபம்: மரகதம் - ரிஷப ராசி உள்ளவர்கள், மரகதக் கல்லை அணிந்தால் மிகவும் நல்லது.
3. மிதுனம்: முத்து - மிதுன ராசி உள்ளவர்கள், முத்து அணிந்தால் சிறந்த பலனைப் பெறலாம்.
4. கடகம்: நீல வண்ண முத்து கடக ராசிக்காரர்கள், மின்னும் நீல வண்ண முத்தை அணிந்தால், செல்வம் கொழிக்கும்.
5. சிம்மம்: மாணிக்கம் - சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கக்கல்லை அணிந்தால், அதிர்ஷ்டம் கொழிக்கும்.
6. கன்னி: நீலம் - நீலக் கல்லை கன்னி ராசிக்காரர்கள் அணிந்தால், எப்போதும் நல்லது நடக்கும்.
7. துலாம்: பச்சை மணிக்கல் - பச்சை மணிக்கல்லானது, துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசிக்கல்லாகும்.
8. விருச்சிகம்: செவ்வந்திக்கல் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வந்திக்கல் மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
9. தனுசு: புஷ்பராகம் - தனுசு ராசிக்காரர்கள், புஷ்பராகம் என்னும் அதிர்ஷ்டக்கல்லை அணிவது நல்லது. வேண்டுமெனில், மாணிக்கம் மற்றும் செவ்வந்திக்கல் போன்ற ராசிக்கற்களைக் கூட அணியலாம்.
10. மகரம்: ஆம்பர் - ஆம்பர் கல்லை மகர ராசிக்காரர்கள் அணிந்தால், வீட்டில் மகிழ்ச்சியுடன், செல்வமும் கொழிக்கும்.
11. கும்பம்: கோமேதகம் - கும்ப ராசிக்காரர்கள், கோமேதக கற்களை அணிந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாகவும், செல்வ செழிப்புடனும் இருக்கும்.
12. மீனம்: நீல பச்சை நிறக்கல் - மீன ராசிக்காரர்கள், இந்த நீல பச்சை நிறக்கல்லை அணிந்தால், வலிமையிழந்து இருக்கும் கிரகங்கள் வலிமைப் பெற்று, செல்வத்தைக் கொழிக்கும்.