1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஆஞ்சநேயரை வழிப்பட உகந்த நாட்கள் எவை தெரியுமா...?

ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்ச நேயர். அறிவு, உடல், அறிவு, வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக  கொண்டாடப்படுகிறது.
வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆஞ்சநேயர் ஆவார். ஆஞ்சநேயரை எல்லா  நாட்களிலும் வழிபடலாம். புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
 
ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்தது நினைத்த நேரத்தில் நடைபெறும் என்பது நம் முன்னோர்களின்  நம்பிக்கையாகும்.
 
ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ராமநாத வழிபாடு ஆகும். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிக நல்ல  பலன்களை தரும்.
 
புராணக் கதைகளின்படி சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாம். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் சற்று குறையும் எனவும் நம்பப்படுகிறது.
 
முழுமையான பக்தியோடு ஒருவர் ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், ஆஞ்சநேயரின் இறைத்தன்மையுள்ள பாதுகாப்பு கிடைக்கும் என  நம்பப்படுகிறது.
 
ஆஞ்சநேயர் மந்திரம்:
 
“ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமிகி ஹனுமதே லம் லம் லம் லம் கைல ஸம்பத் கராய ஸ்வாஹா”.