திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2022 (23:27 IST)

கடவுளை கனவில் கண்டால் என்ன பலன்கள் தெரியுமா...?

எந்த கடவுளை கனவில் கண்டாலும் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் விலகும். எல்லா பிரச்சனைகளிளிருந்தும் வெற்றி கொள்ளும் சக்தி கிடைக்கும்.


கோவில் கோபுரம் நம் கனவில் வந்தால் வாழ்க்கையில் முன்னேற போகிறோம் என்று பொருள். மேலும் நம்முடைய கடந்த கால பாவங்கள் விலகி விட்டது என்றும் அர்த்தம்.

கனவில் கோவிலை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும் என்று அர்த்தம்.

கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வந்தால்,சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள் என்று பொருள்.

ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் மூடப்பட்டது போல கனவு வந்தால் நாம் செய்து வரும் தொழிலில் பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்று பொருள்.

நாம் கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைய போகிறோம் என்று பொருள்.

சிவலிங்கம் கனவில் வந்தால் நீங்கள் தினமும் தியானம் செய்யும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது அர்த்தமாகும்.

கனவில் நாம் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் விரைவில் நல்ல வளர்ச்சியை அடைய போகிறோம் என்று பொருள்.