திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (20:05 IST)

சித்திரை மாத ராசிபலன்கள் 2023! – கடகம்!

Monthly Astro Image
சந்திரன் அம்சத்தில் பிறந்திருக்கும் நீங்கள் கவர்ச்சியான பேச்சின் மூலம் காரியங்களை சாதிக்கும் திறமை உடையவர்கள்.

இந்த ஆண்டு எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம்  அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள்  கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். பொருளாதார சிக்கல்கள் விலகும். விவசாயிகளுக்கு புதியதோர் உற்சாகம் பிறக்கும். வியாபாரம் செழிப்படையும்.  வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது. பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.  திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. பொருளாதாரம் சமப்ந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. முடிந்தவரை தருமப் பணியில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் சகஜ நிலைமை இருந்து வரும். பெற்றோர் நலம் சிறப்படையும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.

கலைத்துறையினர் சீரான பலனைக் காண்பார்கள். ஆனாலும் இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும். சிக்கனமாக செலவழிக்கவும். சினிமா நாட்டியம் நாடகம் சித்திரம் சிற்பம் முதலிய கலைத்துறை சம்பந்தப்பவர்களுக்கு அமோகமான வரவெற்பு ஏற்படும். பொன்னும் பொருளும் பரிசாகப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். முன்விரோதம் காரணமாக ஒரு சிக்கல் வரலாம். அதனை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். புதிய முயற்சிகளை ஈடுபடும் போது ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது.

பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.  தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்களுக்கு  தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். அதே வேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு உண்டு.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மஹாலக்ஷ்மியை மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து வணங்க காரிய வெற்றி உண்டாகும்.