வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

பூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன?

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடலுக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.
வெற்றிலையின் நுனுயில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர். பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது.
 
சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு  அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைக்கும் வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு நல்லதல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்பாதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும்,  மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.