பரிகார பூஜைகள் செய்ய சிறந்த ராகு காலம் !!

raku ketu
Sasikala|
ராகு காலத்தை "அமிர்த காலம்" என்று சொல்வார்கள். அமிர்தம் எப்படி அதை அருந்தியவர்களுக்குப் பூரண ஆயுளைத் தருகிறதோ, அதுபோல ராகு காலத்தில்  செய்யப்படும் பூஜைகள் புண்ணியத்தைப் பெருக்கிக் கொடுக்கின்றன. 

நல்ல காரியங்களை ராகு காலத்தில் செய்யக்கூடாதா ஏன்
ராகுவைப் பற்றிய ஆன்மிகத் தகவல்களை நினைப்பதே புண்ணியம் என்று சொல்லப்படுகிறது.  ஹோமங்கள் பற்றிய எல்லா விஷயங்களும் வேத நூல்களில்  இருந்தாலும் பரிகார பூஜைகள் பற்றிய தகவல்கள் பழமையான ஜோதிட நூல்களிலேயே உள்ளன.
 
ராகு காலத்தில் எல்லா பூஜைகளையும் செய்ய முடியாது. பரிகார பூஜைகளை மட்டும்தான் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். ராகுகாலம் சிறந்த பரிகார காலம் என்று அதில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ராகு காலம் நல்ல நேரமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கஷ்டத்தில் இருந்துகொண்டு பரிகாரம் தேட நினைப்பவர்களுக்கு ராகு காலம் மிக உகந்த நேரம் ராகு காலம் தான்.
 
சத்ரு உபாதைகள் தீர்வதற்கு எலுமிச்சம்பழம் உகந்தது. துர்க்கைக்கு இந்தப் பழம் மிகவும் விசேஷமானது. துர்க்கைக்கு இதை மாலையாகவும் சாத்தலாம். எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றும் பழக்கமும் காலங்காலமாக இருக்கிறது. ராகுவுக்கு உடலில்தான் விஷம். ஆனால் நாக்கில் அமிர்தம் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :